நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி

covid movie madhavan amir khan
By Jon Mar 25, 2021 02:52 PM GMT
Report

நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் பரவி வந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில், தற்போது இரண்டாவது அலை காரணமாக இந்தியா முழுவதுமே தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மும்பையில் வசித்து வரும் திரையுலக, அரசியல் பிரபலங்களும் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய், கார்த்திக் ஆர்யன், ரன்பீர் கபூர் போன்ற நடிகர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஏற்பட்ட நிலையில், நடிகர் ஆமிர் கானுக்கும் கொரோனா தொற்று உறுதியானது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்நிலையில், தனக்கு கொரோனா தொற்று இருப்பதை நடிகர் மாதவன் அவரது ட்விட்டர் பதிவில் அறிவித்துள்ளார். மும்பையில், ஆமீர்கானின் வீடு இருக்கும் குடியிருப்பில் தான் நடிகர் மாதவனும் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.