நடிகர் மாதவனின் குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதி

covid actor madhavan amir khan
By Jon Apr 03, 2021 01:17 PM GMT
Report

தன்னுடைய குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை படுவேகமாக பரவி வருகிறது, நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர், நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதை அவரே உறுதிப்படுத்திய நிலையில், தற்போது அவரது குடும்பத்தில் 5 பேருக்கு தொற்று இருப்பதாக தெரிவித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ராக்கெட்ரி பட டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.