கணவருடன் லிப்லாக், புதிய வீடியோ ரிலீஸ் செய்த கிரிசில்டா - எடிட் செஞ்சதே இவருதானாம்..
மாதம்பட்டி ரங்கராஜூவுடன், ஜாய் கிரிசில்டா வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
மாதம்பட்டி ரங்கராஜ்
'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். தொடர்ந்து 'பென்குயின்' படத்திலும் நடித்தார். மேலும், தனது சமையல் கலை மூலம் அசத்தி வருகிறார்.
தற்போது, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியிலும் நடுவராகப் பங்கேற்று வரும் இவர், ஏற்கெனவே திருமணமாகி ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஸ்ருதி, ஒரு வழக்கறிஞர்.
இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜின் காஸ்டியூம் டிசனைரான ஜாய் கிறிசால்டா, ரங்கராஜின் மனைவி என்று கூறி திருமண புகைப்படங்களை வெளியிட்டார். மேலும், கிரிசில்டா தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கிரிசில்டா வீடியோ
அதேபோல், திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் சென்றிருந்த மாதம்பட்டி ரஙகராஜ், மனைவி பக்கத்தில் அமர்ந்திருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது கிரிசில்டா ரங்கராஜூவுடன்,
❤️ edited by husband @MadhampattyRR #madhampattyrangaraj pic.twitter.com/KzUj0ieVw2
— Joy Crizildaa (@joy_stylist) August 19, 2025
லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் வகையில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். மேலும், இந்த வீடியோவை எடிட் செய்தது கணவர் ரங்கராஜ் என்று கிரிசில்டா பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.