பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்கள் முடக்கம்
பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பப்ஜி விளையாட்டை மிகுந்த ஆபாசமான வர்ணனையுடன் யு டியூபில் நேரலை செய்துவந்ததாக பப்ஜி மதன் மீது புகார்கள் குவிந்தன.
மேலும் சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதுடன் , அவர்களிடம் இருந்து பெரும் அளவில் பணம் வாங்கி கோடி, கோடியாக பணம் சம்பாதித்துள்ளதும் தெரிய வந்தது.
முதலில் மதனின் மனைவி கிருத்திகாவை போலீசார் கைது செய்த நிலையில், தர்மபுரியில் பதுங்கி இருந்த மதன் கைது செய்யப்பட்டார்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து பப்ஜி மதனிடம் விடிய, விடிய போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மதனின் யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். முதலில் 8 லட்சம் சப்ஸ்கிரைபர் கொண்ட யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.