என்னாது சொகுசு பங்களாவா? சொந்தமா வீடு கூட இல்லை :பப்ஜி மதன் மனைவி
எங்களுக்கு சொந்தமா வீடு கூட இல்லை, ஒரே ஒரு ஆடி கார் தான் உள்ளது 4 புகார்களை வைத்து குண்டர் சட்டத்தில் வழக்குபதிவு செய்தது எப்படிஎன பப்ஜி மதனின் மனைவி கேள்விஎழுப்பியுள்ளார்.
குண்டர் சட்டத்தில் மதன்:
ஆபாச பேச்சு, பண மோசடி உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பப்ஜி மதன் மீது இன்று குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இரண்டு முறை மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
ஆடிகார்தான் இருக்கு:
இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் பப்ஜி மதன் மனைவி கிருத்திகா.
அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் : மதன் யூ-டியூப் சேனலில் 20 மணிநேரம் வேலைபார்த்தவர் .
அவர் வீடுகள், கார்கள் என்று சொத்துக்களை வாங்கிக் குவிக்கவில்லை. 10 ஆண்டுகளாக மதன் எந்த சொத்துக்களையும் வாங்கவில்லை.
நாங்கள் சொந்த வீட்டில் வசிக்கவில்லை. எங்களுக்கு ஒரே ஒரு ஆடி கார்தான் இருந்தது; அது சொகுசு கார் அல்ல என கூறினார்.
மேலும், யூ-டியூப் வீடியோக்களில் உள்ள பெண்ணின் குரல் என்னுடையது அல்ல; அது எனது குரல்தான் என்பதை நிரூபிக்கத் தயாரா?மேலும், எங்களிடம் அதிக அளவிலான பணம் புழங்குவதாக கூறியிருப்பது முற்றிலும் பொய் என கூறிய கிருத்திகா.
குண்டர் சட்டம் பதிந்தது எப்படி:
எந்த ஆதாரமும் இல்லாமல் எங்கள் மீது நான்கு நபர்கள் மீண்டும் மீண்டும் புகார் கொடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மேலும், தனது கணவர் மதன் மீது கொடுக்கப்பட்டுள்ள 200 புகார்கள் குறித்த விவரங்களை காவல் ஆணையரிடம் கேட்க வந்த போதுதான், தனது கணவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது தெரியவந்ததாகவும், 4 புகார்களை வைத்து குண்டர் சட்டத்தில் வழக்குபதிவு செய்தது எப்படி? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.