உக்ரைனை முதுகில் குத்திய பிரான்ஸ் : ரஷ்யாவில் இருந்து அதிகளவில் எரிபொருள் இறக்குமதி

Russo-Ukrainian War Ukraine France
By Irumporai Jun 15, 2022 01:04 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உக்ரைன் மீதான ரஷ்யா போர் தொடுத்தன் காரணமாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்தன.

இந்த நிலையில், ஐரோப்பிய யூனியனௌ சேர்ந்த பிரான்ஸ், ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் எரிபொருள் இறக்குமதி செய்வதை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலான எரிபொருளுக்கு ரஷியாவையே நம்பி உள்ளது.

ரஷ்யாவிடம் எரிப்பொருள் வாங்கும் பிரான்ஸ்

ஆனாலும் இந்த ஆண்டுக்குள் ரஷியாவிடம் இருந்து பெறப்படும் எரிபொருள் இறக்குமதி முற்றிலுமாக குறைக்கப்படும் என ஐரோப்பிய யூனியன் கூறியிருந்தது இந்த நிலையில் பிரான்ஸ்  கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் ரூ.7200 கோடி மதிப்பிலான எரிபொருட்களை பிரான்ஸ் இறக்குமதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைனை முதுகில் குத்திய  பிரான்ஸ் : ரஷ்யாவில் இருந்து அதிகளவில் எரிபொருள் இறக்குமதி | Macron Ukraine Russia War Atrocities

உக்ரைனை ஏமாற்றிய பிரான்ஸ் 

இதையடுத்து உக்ரைனை பிரான்ஸ் ஏமாற்றிவிட்டது என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் எரிபொருள் இறக்குமதி செய்வதை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

உக்ரைனை முதுகில் குத்திய  பிரான்ஸ் : ரஷ்யாவில் இருந்து அதிகளவில் எரிபொருள் இறக்குமதி | Macron Ukraine Russia War Atrocities

 இந்த நிலையில் உக்ரைனின் மீதான போர் நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டதன் மூலம், வரலாற்று மற்றும் அடிப்படையை பிழையை ரஷ்ய அதிபர் புதின்  செய்துவிட்டார், ஆனால் அதற்காக யாரும் ரஷ்யாவை அவமானப்படுத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியிருந்தது குறிபிடத்தக்கது.