Monday, Mar 31, 2025

கொரோனா தடுப்பூசி போடாதவர்களை கெட்ட வார்த்தையில் வசைபாடிய பிரான்ஸ் அதிபர்

macron French President Emmanuel Macron பிரான்ஸ் unvaccinatedpeople covidpeople
By Petchi Avudaiappan 3 years ago
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரான்ஸ்
Report

கொரோனா தடுப்பூசி போடாதவர்களை  பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அவமதித்துப் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் ஆடத் தொடங்கியுள்ளது. அதுவும் பிரான்ஸில் தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அங்கு கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அதிபர் மேக்ரான் தலைமையிலான அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இதனிடையே பிரான்ஸ் அதிபர் தடுப்பூசி போடாதவர்களை மிகவும் தரக்குறைவாகப் பேசியது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான உரையில் தடுப்பூசி செலுத்தாதவர்களை சிறையில் அடைக்கப்போவதில்லை. அவர்களைக் கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தப் போவதும் இல்லை. வரும் ஜனவரி 15 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தாதவர்கள் உணவகங்கள் செல்ல முடியாது, திரையரங்குக்குள் நுழைய முடியாது.

தடுப்பூசி போடாதவர்களை இழிவு படுத்தப் போகிறேன். நான் அவர்களை தொந்தரவு செய்ய விரும்புகிறேன். கோப்படுத்த விரும்புகிறேன். இதுதான் இனி அரசின் கொள்கை. நாங்கள் அதை இறுதி வரை செய்வோம் என கூறியுள்ளார். அப்போது அதிபர் மேக்ரான்  பயன்படுத்திய பிரெஞ்ச் வினைச்சொல்லான “emmerder” என்பது மிக மோசமான வசைச்சொல் என்று கூறப்படுகிறது.