தனுஷூக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் சிம்பு - எதிர்பாராத ட்விஸ்டால் ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகர் தனுஷ் நடித்துள்ள 'மாறன்' படத்தின் டிரெய்லர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
Guess who is going to release #MaaranTrailer ? pic.twitter.com/zhYf6qUG0C
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 26, 2022
இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் படத்தின் முதல் பாடலாக பொல்லாத உலகம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இதனிடையே கமல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து நடிகர் சிம்பு இந்த வாரத்தில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். அந்த நிகழ்ச்சியின் மேடையில் தனுஷின் மாறன் படத்தின் ட்ரெய்லரை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.