நேரடியாக ஓடிடியில் வெளியாகும் தனுஷின் ‘மாறன்’ ? - வெளியான சுவாரஸ்ய தகவல்

dhanush 43 maaran update ott release dhanush & malavika mohan
By Swetha Subash Jan 03, 2022 08:24 AM GMT
Report

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் , ஹாலிவுட் என அடுத்தடுத்து தனது முத்திரையை பதித்து நடிப்பு அசுரன் என கொண்டாடப்படும் பன்முகத்தன்மை கொண்டவர் நடிகர் தனுஷ்.

இவர் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் மாறன். தனுஷின் 43 வது திரைப்படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார்.

சத்தியஜோதி ஃபிலிம்ஸ் படத்தை தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘மாளவிகா மோகன்’ நடித்துள்ளார்.

படம் சமீப காலமாகவே ஓடிடி தளத்தில் வெளியாகும் என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் தற்போது அந்த தகவல் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

முன்னதாக மாறன் திரைப்படத்தை படக்குழுவினர் ஓடிடிக்கு விற்றதாகவும் , கொரோனா ஊரடங்கு முடிந்து மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டதால் படத்தை திரையரங்கில் வெளியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பல திரைப்படங்களின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளதால், மாறன் திட்டமிட்டபடி ஒடிடியில் வெளியாகும் என சில நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாறன் திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு , டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான பாலிவுட் திரைப்படமான அட்ரங்கி ரே என்னும் கலாட்டா கல்யாணம் திரைப்படம் ஒடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.