மாநாடு படத்தின் 3 நாள் வசூல் இவ்வளவா? - சுரேஷ் காமாட்சி ட்விட்டால் குஷியில் ரசிகர்கள்

STR MaanaaduBlockbuster SilamabarasanTR
By Irumporai Nov 29, 2021 09:04 AM GMT
Report

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'மாநாடு' திரைப்படம் கடந்த நவம்பர் 25 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புக்கும், யுவனின் இசைக்கும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 தமிழ் திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக டைம் லூப் கான்சேப்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் எஸ். ஜே. சூர்யா, பாரதிராஜா, எஸ். ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி அமரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

மாநாடு திரைப்படம் நடிகர் சிம்புவிற்கு திரை வாழ்வில் பெரும் திருப்பு முனையாக அமைந்துள்ளது என்றே கூறலாம், இந்த நிலையில் மாநாடு திரைப்படம் முதல் நாள் வசூலில் ரூ. 8 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

 இந்த நிலையில், இயக்குனர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், மூன்று நாட்களில் மாநாடு திரைப்படம் ரூ.20 கோடி ரூபாய் வசூலை ஈட்டி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வாரத்தில் மொத்தம் 30 கோடி ரூபாய் வசூலை மாநாடு திரைப்படம் எட்டும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் சிம்புவின் ரசிகர்கள் உற்சாகத்தில் உறைந்து போயுள்ளனர்.