வர்றேன்.. திரும்ப வர்றேன்.. மாஸ் எண்ட்ரீ கொடுக்கும் சிம்பு - மகிழ்ச்சியில் ரசிகர்கள்
சிம்பு நடித்துள்ள 'மாநாடு' படத்தின் புதிய டிரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படத்தில் நடித்துள்ளார் சிம்பு. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா மற்றும் கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளனர்.
கடந்த பொங்கலுக்கு சிம்பு நடிப்பில் வெளியான 'ஈஸ்வரன்' படத்திற்கு பிறகு நீண்ட காலமாக இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர் . இந்நிலையில் இந்தப்படத்தின் புது டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே நேற்று முன்தினம் தினம் 'மாநாடு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிலம்பரசன், எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தப்படம் யுவனுக்கு மிகப்பெரிய கம்பேக்காக அமையும் என்றும், இந்தப்படத்தில் புதுமையான சிம்புவை பார்க்கலாம் என்று படக்குழுவினர் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.