மாநாடு படத்தின் காலை 5 மணி காட்சிகள் ரத்து - ரசிகர்கள் ஏமாற்றம்: வருத்தம்

cancel Maanaadu release show
By Anupriyamkumaresan Nov 25, 2021 02:15 AM GMT
Report

மாநாடு படத்தின் 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. மாநாடு படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தயாரிப்பாளர் ஒத்திவைப்பதாக நேற்று மாலை அறிவித்தார்.

பைனான்சியரிடம் பெறப்பட்ட கடனை திரும்ப செலுத்தாததே அதற்கு காரணம். இந்நிலையில், பேச்சுவார்த்தை நடத்தி 11 மணி மணியளவில் படம் வெளியாகும் என அறிவித்தனர்.

ஆனாலும், அதிகாலை வரை தயாரிப்பாளர் - பைனான்சியர் இடையேயான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றது.

அதனால் திரையரங்குகளுக்கு KDM கிடைக்கப்பெறாததால் 5 மணிக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. 8 மணியில் இருந்து திரையிடப்படும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.