சிம்புவின் கண்ணீரில் மண்ணை அள்ளிப்போட்ட தமிழ் ராக்கர்ஸ் - குமுறும் ரசிகர்கள்
சிம்புவின் மாநாடு படத்தை தமிழ் ராக்கர்ஸ் தளம் இணையத்தில் வெளியிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நடிகர் சிலம்பரசன் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்த ‘மாநாடு’ திரைப்படம் கடந்த 25 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.
நீண்ட நாட்களுக்குப் பின் சிம்புவின் படம் வெளியாவதால் ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகினரும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக படம் கடைசி நேரத்தில் ரிலீசாகாது என அறிவிக்கப்பட்டது. அதன்பின் உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சிம்புவின் தாயார் உஷா ஆகியோர் உதவியால் படம் ரிலீசானது.
மாநாடு படம் சிம்பு ரசிகர்களுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் பிடித்திருக்கிறது. ஆனால் படம் ரிலீஸான சில மணிநேரங்களில் அதை ஆன்லைனில் தமிழ் ராக்கர்ஸ் கசியவிட்டுவிட்டது. ஏற்கனவே மழையால் வார இறுதி நாட்களின் வசூல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழ் ராக்கர்ஸ் இணையதளமும் இதில் இணைந்துள்ளது.
இதனால் சிம்புவின் ரசிகர்கள் கடும் மனக் குமுறலில் உள்ளனர்.