2வது நாளில் தொடரும் சோகம்: நீச்சல் போட்டியில் இந்திய வீராங்கனை தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான நீச்சல் போட்டியில் இந்தியாவின் மானா படேல் அதிர்ச்சி தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
இந்தியாவின் சார்பில் நீச்சல் போட்டியில் கலந்துக்கொண்ட ஒரே ஒரு வீராங்கனையான மானா படேல், ஒலிம்பிக் வரலாற்றிலேயே நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் தேர்வான முதல் பெண் ஆவார்.
இதனால் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இவருக்கான தகுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது. மகளிர் 100மீ பேக் ஸ்ட்ரோக் ஹீட்ஸ் பிரிவில் கலந்துக்கொண்ட அவர் போட்டி தூரத்தை 1:05:20 நிமிடத்தில் கடந்து 2வது இடம் பிடித்தார். முதல் இடத்தை பிடித்தவருக்கும், இவருக்குமான கால வித்தியாசம் 3 நொடிகள் மட்டுமே இருந்தது.
மொத்தம் 6 குழுக்களாக இந்த நீச்சல் போட்டி நடைபெற்ற நிலையில், ஒட்டுமொத்த நீச்சல் வீராங்கனைகளும் போட்டி தூரத்தை கடந்த கால அளவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதில் மானா பட்டேல் 39வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆனால் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேற முதல் 16 இடங்களுக்குள் வரவேண்டும் என்பதால் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து மானா படேல் வெளியேறினார் .