மன் கி பாத் நிகழ்ச்சி - பிரதமர் மோடி இன்று உரை

talk pm modi maan ki baat
By Anupriyamkumaresan Aug 29, 2021 04:15 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in இந்தியா
Report

மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ என்ற இந்த நிகழ்ச்சி, இன்று காலை  11 மணிக்கு தொடங்க இருக்கிறது . வானொலியில் மோடி உரையாற்ற உள்ளார். பிரதமர் மோடியின் 80-வது மன் கி பாத் நிகழ்ச்சி இதுவாகும்.

மன் கி பாத் நிகழ்ச்சி - பிரதமர் மோடி இன்று உரை | Maan Ki Baat Pm Modi Today Talk

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறித்தும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகில இந்திய வானொலி மட்டும் இன்றி தூர்தர்ஷனிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மேலும், பிரதமரின் உரையை, நரேந்திர மோடி மொபைல் ஆப் மூலமும் கேட்க முடியும். இன்று காலை 11 மணிக்கு, அவரின் இந்த உரை தொடங்குகிறது.