டீ, காபி குடிக்காதீங்க : அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

DMK Ma. Subramanian
By Irumporai Apr 12, 2023 04:36 AM GMT
Report

தமிழ்நாட்டில் கோடைக்காலம் அதிகரித்துள்ள நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

 அமைச்சர் அறிவுரை

தமிழ்நாட்டில் கோடை வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

 டீ காபி வேண்டாம்

அதில் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் வெப்ப அலையில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என கூறியுள்ளார். வெயில் சமயத்தில் டீ, காபி மற்றும் செயற்கை பானங்களை அருந்துவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

டீ, காபி குடிக்காதீங்க : அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை | Ma Subramaniyan Advice For Protect Summer Heat

 இளநீர் சாப்பிடுங்க

வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள தர்பூசணி, இளநீர், நுங்கு உள்ளிட்ட இயற்கையான உணவுகளை சாப்பிட அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் தர்பூசணி, மாம்பழம் உள்ளிட்ட சீசன் பழங்களை ரசாயனம் சேர்த்து பழுக்க வைப்பதாக கண்டறியப்பட்டால் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.