வெள்ள பாதிப்பு...எடப்பாடி - ஜெயக்குமார் ஆகியோருக்கு தார்மீக உரிமை இல்லை..!! மா.சுப்ரமணியன்!!

Tamil nadu Ma. Subramanian Edappadi K. Palaniswami D. Jayakumar
By Karthick Dec 10, 2023 05:06 AM GMT
Report

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் மா.சுப்ரமணியன் வெள்ள பாதிப்புகள் குறித்து பேச எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜெயக்குமார் ஆகியோருக்கு உரிமை இல்லை என விமர்சித்துள்ளார்.

வெள்ள பாதிப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு விட்டாலும், ஆனால் தாழ்வான பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் தேங்கி நின்றவாறே உள்ளது.

ma-subramanian-slams-jayakumar-and-eps-in-flood

தொடர்ந்து நிவாரண உதவிகளும், மீட்பு பணிகளும் நடைபெற்று வரும் சூழலில், சென்னை சைதாப்பேட்டையில் அடையாற்றங்கரை ஓரம் வசிக்கும் மக்களுக்கு பருவமழை சிறப்பு மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்தார் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏற்பட்டுள்ள வெள்ளபாதிப்புகள் குறித்து பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் ஜெயக்குமார் ஆகியோருக்கு தார்மீக உரிமை இல்லை என்று விமர்சித்தார்.

ma-subramanian-slams-jayakumar-and-eps-in-flood-

ஜெயக்குமார் வெறும் கரண்டியை சுழற்றி கொண்டு இருப்பவர் என கடுமையாக சாடிய மா.சுப்ரமணியன், அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார். மழைநீர் வடிகால் மூலம் நீர் அனைத்தும் வடிந்துவிட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்து, முன்னதாக கொசஸ்தலை, அடையாறு, கூவம், பக்கிஹாம் கால்வாயில் சென்னையின் மழைநீரை கடல் உள்வாங்கவில்லை என்றும் இதன் காரணமாக தான் ஒருநாள் முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது என்று கூறினார்.

எடுபிடி பழனிசாமியின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றுவோம் - ம.நீ.ம எச்சரிக்கை!

எடுபிடி பழனிசாமியின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றுவோம் - ம.நீ.ம எச்சரிக்கை!

5 நாட்களில் 58 செ.மீ

பின்னர் மழைநீர் கடலுக்கு செல்லத் தொடங்கிய உடனே வெள்ளம் குறையத் தொடங்கியதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் மா.சுப்ரமணியன், தாழ்வான பகுதிகளில் உள்ள தண்ணீர் மோட்டார் மூலம் நீர் அகற்றப்பட்டுள்ளது என்றார். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உபரிநீர் வந்ததே வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், உள்ளகரம் போன்ற பகுதிகள் பாதிக்க காரணம் என குறிப்பிட்டார்.

ma-subramanian-slams-jayakumar-and-eps-in-flood

வேறு எந்த பருவமழையுடனும் ஒப்பிட முடியாத அளவில், 5 நாட்களில் 58 செ.மீ மழை பெய்துள்ளதாக குறிப்பிட்டு, இதனால் வந்த தேக்கமே தவிர ஆக்கிரமிப்பு, கால்வாய் பணிகள் முடியவில்லை என்று கூறி, அவ்வாறு குறை சொல்வதற்கு முன் இந்த ஆக்கிரமிப்பால் தண்ணீர் செல்லவில்லை என்று காட்டினால் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என்றும் அதிரடியாக தெரிவித்தார்.