அரசு சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு - பணிக்கு வராத மருத்துவர் மீது நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு
வாடிப்பட்டி அருகே சுகாதார நிலையத்தில் பணியில் இல்லாத மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் உத்தரவிட்டுள்ளார். மதுரைக்கு இன்று காலை வருகை தந்தார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரணியன். அங்கு கொரோனா பரிசோதனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வு கொண்ட கொண்ட அமைச்சர்
இதனையடுத்து, வாடிப்பட்டி அருகே, அய்யங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்சு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மருத்துவர் பூபேஸ்குமார் என்பவர் பணிக்கு வரவில்லை. இது குறித்து அமைச்சர் விசாரித்தபோது, தினமும அவர் பணிக்கு 2 மணிநேரம் தாமதமாக வருவதாக கூறியுள்ளனர்.
உத்தரவு
தாமதம் குறித்து, மருத்துவர் பூபேஸ்குமார் கடிதம் எதுவும் வழங்கவில்லை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, பணிக்கு வராத அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.