செவிலியர்களுக்கு சம்பளம் உயர்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

Ma. Subramanian
By Nandhini May 22, 2022 10:28 AM GMT
Report

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குத்துச்சண்டை வீரர் பாலாஜியை நேரில் சந்தித்து, உடல் நலம் குறித்து விசாரித்தார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

இதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார்.

அப்போது அவர் பேசியதாவது -

தேசிய நலவாழ்வு குழுமத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதிய உயர்வு குறித்து கோரிக்கை வைத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று, 5, 971 பேருக்கு 32கோடி மதிப்பில் 30 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட இருக்கிறது. மேலும், மக்களைத்தேடி மருந்துவம் திட்டத்தில் 4,848 செவிலியர்கள் ஊதியம் 14 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது.

அதேபோல் 2,448 முன்களப் பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு 11ஆயிரத்திலிருந்து 3 ஆயிரம் உயர்த்தி 14 ஆயிரம் ரூபாயாக வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்த்துறையில் பணியாற்றும் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்கப்பட உள்ளது என்றும், இந்த 6 மாத மகப்பேறு விடுப்பின் மூலம் 40 ஆயிரம் பெண்கள் பயடைவார்கள் என்று முன்பே அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

செவிலியர்களுக்கு சம்பளம் உயர்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு | Ma Subramanian