மணீஷ் சிசோடியாவை விடுவிக்க வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
டெல்லியில் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை விடுதலை செய்யுங்கள் என பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி துணை முதல்வர் கைது
டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவை இட்டு கட்டிய புகாரில் கைது செய்தது வேதனை அளிக்கிறது என்றும் அரசியல் சட்டத்தின் அடிப்படை கொள்கைகளை கொச்சைப்படுத்தி கைது செய்யப்பட்டுள்ளார் என முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலை செய்யுங்கள்
மேலும் டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டு கொண்டுள்ளார்.
மதுபான கொள்கையில் முறைகேடு செய்ததாக சமீபத்தில் சிபிஐ அதிகாரிகள் டெல்லி துணை முதலமைச்சராக இருந்த அனைத்து மணீஷ் சிசோடியாவை கைது செய்தனர் என்றும் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.