இந்தி திணிப்பை கைவிடுங்கள்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
இந்தி திணிப்பு முயற்சியை கை விடுங்கள் என பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் கடிதம்
தமிழ்மொழி மட்டுமன்றி அனைத்து மாநில மொழிகளையும் உரிமைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் தமிழகம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது என்றும் அலுவல் மொழி தொடர்பாக எம்பிக்கள் குழு பரிந்துரைகளை செயல்படுத்த கூடாது என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அலுவல் மொழி
மேலும் இளைஞர்கள் இந்தி மட்டுமே படித்திருந்தால் மட்டுமே சில வேலைகளுக்கு தகுதி பெறுவார்கள் என்றும் ஆட்சேர்ப்புக்கான தேர்வின்போது கட்டாயமாக ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை முதன்மைப் படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
இந்தியைத் திணிக்கும் முயற்சிகளை கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைத் தொடர்ந்து ஒளிரச் செய்ய வேண்டுமென வலியுறுத்தி, மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். pic.twitter.com/hIGez1xmQ4
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 16, 2022
அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழ் உள்பட அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக எட்டாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்