அமமுகவின் ஒரே ஒரு பேரூராட்சி தலைவர் கட்சியில் இருந்து நீக்கம்: டிடிவி தினகரன் அதிரடி

TTV Dhinakaran
By Irumporai Apr 21, 2023 08:05 AM GMT
Report

ஒரத்தநாடு பேரூராட்சி தலைவரும் அமமுகவின் தெற்கு மாவட்ட செயலாளருமான சேகரை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைப்பதாக டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது

தினகரன் அறிக்கை

கழகத்தின் கொள்கை குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு கலங்கமும் அவ பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் எம் சேகர் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.

அமமுகவின் ஒரே ஒரு பேரூராட்சி தலைவர் கட்சியில் இருந்து நீக்கம்: டிடிவி தினகரன் அதிரடி | M Sekhar Dismiss From Ammk Party

கட்சியிலிருந்து நீக்கம்

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார். அமமுகவின் ஒரே ஒரு பேரூராட்சி தலைவரையும் டிடிவி தினகரன் அதிரடியாக நீக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது