ஐபிஎல் போட்டி - சென்னை சேப்பாக்கத்தில் தல தோனி பயிற்சி... - Viral Photo...!

MS Dhoni Viral Photos IPL 2023
By Nandhini Mar 03, 2023 01:10 PM GMT
Report

ஐபிஎல் 2023 போட்டிக்காக சென்னை சேப்பாக்கத்தில் தல தோனி பயிற்சியில் ஈடுபடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

ஐபிஎல் 2023 போட்டி -

ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டி மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.

சென்னை வந்தடைந்தார் தோனி

நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் பயிற்சிக்காக நேற்று சென்னை வந்தடைந்தார் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

சென்னையில் பயிற்சி இறங்கிய தோனி தோனியைப் பொறுத்தவரை இந்த ஐபிஎல் போட்டி அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வெற்றி கோப்பையுடன் ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் விடை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

m-s-dhoni-viral-photo-ipl-2023

சேப்பாக்கத்தில் தோனி பயிற்சி

இந்நிலையில், ஐபிஎல் 2023க்கான பயிற்சியை தற்போது எம்எஸ் தோனி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை தொடங்கியுள்ளார். தோனியை பார்ப்பதற்காக சேப்பாக்கத்தில் ரசிகர்கள் கூட்டம் படையெடுத்துள்ளனர்.

இதனால், ரசிகர்களை கட்டுப்படுத்த அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் மகிழ்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.