ரசிகர் ஒருவருக்கு டி-ஷர்ட்டில் ஆட்டோகிராப் போட்ட தோனி - வைரலாகும் வீடியோ...!
ரசிகர் ஒருவருக்கு டி-ஷர்ட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் M.S.தோனி ஆட்டோகிராப் போட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
M.S.தோனி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்திய அணிக்கு ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய அனைத்து கோப்பைகளையும் வென்று கொடுத்தவர் தோனி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி -
இந்நிலையில், 2023ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23-ம் தேதி கொச்சியில் நடக்க உள்ளது. இதில், 10 அணிகளும் தக்க வைத்துள்ள மற்றும் ரிலீஸ் செய்யவுள்ள வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2023-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணியை தோனி வழிநடத்துவார் என்று சென்னை அணியின் கேப்டனாக தோனி நீடிப்பார் என்றும் சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் கூறியுள்ள தகவல் ரசிகர்களை இன்ப கடலில் ஆழ்த்தியுள்ளது.
ஆட்டோகிராப் போட்ட தோனி
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தோனி தனது ரசிகர் ஒருவருக்கு டி-ஷர்ட்டில் ஆட்டோகிராப் போடுகிறார். தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
One Lucky fan gets autograph on shirt by MS Dhoni ??
— DHONI Empire™ (@TheDhoniEmpire) December 11, 2022
Me when @msdhoni ??#MSDhoni pic.twitter.com/nIf9IPdY0Q