பனை மரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் - அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவிப்பு

Agriculture budget M. R. K. Panneerselvam
By Thahir Aug 14, 2021 07:48 AM GMT
Report

தமிழக சட்டசபை வரலாற்றில், முதல் முறையாக வேளாண்மை துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கலாகியுள்ளது.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், வேளாண் துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இந்த பட்ஜெட்டில் பனை உற்பத்தியை பெருக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பாண்டில் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளையும், ஒரு லட்சம் பனங்கன்றுகளையும் முழு மானியத்தில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பனை மரத்தை வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெறுவது கட்டாயம் என்றும் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பனை மரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் - அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவிப்பு | M R K Panneerselvam Agriculture Budget

பனை வெல்லத்தை ரேசன் கடைகள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பனை மேம்பாட்டு இயக்கம் ரூ.3 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

உணவு தானிய உற்பத்தியில் நடப்பாண்டு 125 மெட்ரிக் டன் என்ற இலக்கை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தென்னையில் உற்பத்தித் திறனை அதிகரிக்க ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாக சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னையில் பாதிப்பை ஏற்படுத்திடும் வெள்ளை ஈயின் தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.