பிரதமர் மோடியின் தமிழக பயணம் திடீர் ரத்து - என்ன காரணம்?

Tamil nadu Narendra Modi Tiruppur
By Sumathi Jan 07, 2024 01:55 AM GMT
Report

பிரதமர் மோடியின் திருப்பூர் சுற்றுப்பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் திருச்சி வந்த நிலையில், இந்த மாதமே தமிழகத்துக்கு 2வது முறையாக வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் வரும் 19ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

பிரதமர் மோடியின் தமிழக பயணம் திடீர் ரத்து - என்ன காரணம்? | M Modis Tirupur Programme Suddenly Canceled

இதன் தொடக்க விழா ஜனவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியினை தொடங்கி வைக்க வரும் பிரதமர் மோடி அன்றைய தினம் திருப்பூர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்தியா உயர்ந்த ஆழமான வரலாற்றை கொண்டுள்ளது : பிரதமர் மோடி

இந்தியா உயர்ந்த ஆழமான வரலாற்றை கொண்டுள்ளது : பிரதமர் மோடி

பயணம் ரத்து

திருப்பூரில் புதிதாக இஎஸ்ஐ மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி அங்கு பாஜகவின் பொங்கல் விழா சிறப்பு பொதுக்கூட்டத்தில் பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடியின் தமிழக பயணம் திடீர் ரத்து - என்ன காரணம்? | M Modis Tirupur Programme Suddenly Canceled

இந்நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி என்பது திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாஜகவினர் அறிவித்துள்ளனர். தொடர்ந்து, மாற்று தேதியில் இஎஸ்ஐ மருத்துவமனை திறப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.