கலைஞரின் மகனின் அரசு கருணை உடைய அரசாக செயல்படும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
காலை சிற்றுண்டி உணவு தமிழக சட்டசபை பேரவையில் கடந்த மே மாதம் முதல்வர் ஸ்டாலின் அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும்.
அதன் முதல் கட்டமாக இத்திட்டம் சில மாநகராட்சிகளிலும் தொலைதூர கிராமப்புறங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது என்று ஏற்கனவே அறிவித்திருந்தார் .
முதலமைச்சர் தொடங்கிவைத்தார்
அதன் முதற்கட்ட நடவடிக்கையாக மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினமான இன்று முதல் 45 ஆயிரத்து 545 அரசு தொடக்கப் பள்ளிகளில் இத் திட்டம் தொடங்கப்படுகிறது. இன்று காலை 8 மணிக்கு மதுரை நெல்பேட்டை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உணவு பரிமாறி மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின் .

மதுரை ஆதிமூலம் மாநகராட்ட்சியில் உள்ள பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு காலை உணவை பரிமாறிய முதல் அமைச்சர், பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார்.
அப்போது தன் அருகில் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவர்களுக்கு முதல் அமைச்சர் உணைவை ஊட்டி மகிழ்ந்தார்.
பின்னர், மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,தமிழ்நாடு இந்தாண்டு வரலாறு காணாத அளவு நெல் மற்றும் தானிய உற்பத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. மறுபுறம், யாரும் பசியால் வாடிவிடக்கூடாது என்பதற்காக நெல்பேட்டை சமையற்கூடத்தில் தயார் செய்யப்பட்ட உணவு பிஞ்சுக்குழந்தைகளுக்கு செல்கின்றது.
காலை உணவுத் திட்டம் அவசியம்
இந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களை அறிந்து, ஆதிமூலத்திலே தீர்வு காண வேண்டும். அந்த முயற்சியில் ஒருபகுதியாகவே இந்த ஆதிமூலம் பள்ளியில் காலை உணவுத்திட்டத்தை தொடங்கியுள்ளோம்.
இன்றைய நாள் என் வாழ்நாளில் பொன்னான நாளாக அமைந்துள்ளது. கோவிட் தொற்றுக்குப் பின் காலை உணவுத் திட்டம் மிகவும் அவசியமான ஒன்றாக ஆய்வுகள் கருதுகிறது.

வறுமையினாலோ, சாதியினாலோ கல்வி ஒருவருக்கு தடையாக இருக்கக் கூடாது என பெரியார், அண்ணா, கலைஞர் நினைத்தார்கள். அவர்கள் வழியில் செயல்பட்டு வருகிறேன். 1989-ல் ஆட்சிக்கு வந்த கலைஞர் உண்மையான சத்துணவை வழங்கினார்.
பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் காலை உணவு எடுத்துக் கொள்வதில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் அதிகாரிகளின் ஆலோசனைப் படி காலை உணவை கொண்டு வந்துள்ளோம். காலை உணவுத் திட்டம் அரசின் கடமையாகவும், என்னுடைய கடமையாகவும் எண்ணுகிறேன்.
கவலை இன்றி மாணவர்கள் படிக்க வேண்டும்
இதை செலவாக நினைக்கவில்லை. கலைஞரின் மகனின் அரசு கருணை உடைய அரசாக செயல்படும். அரசு காலை மற்றும் மதிய உணவை வழங்குகிறது. எனவே கவலை இன்றி மாணவர்கள் படிக்க வேண்டும்.

தமிழகத்தின் வறுமையை போக்க, மாணவர்களின் பசியைப் போக்க தமிழக அரசு செயல்படும் என்று அவர் பேசினார்.
திருகோணமலையில் பரபரப்பு! அகற்றப்பட்ட புத்தர் சிலை: காலவல்துறையினரின் கன்னத்தில் அறைந்த பிக்கு IBC Tamil
தமிழீழம் கோரும் புலம்பெயர்ந்தோருடன் தொடர்பில்லை : தென்னிலங்கையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா! IBC Tamil