சில அநாதை கட்சிகள் கதறுகின்றன .. 40-ம் நமதே, நாளையும் நமதே : முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாற்று கட்சியை சேர்ந்த 10 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர், இந்த விழா கோவை சின்னியம்பாளையத்தில் இன்று நடைபெற்றது.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் : இன்று ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணைந்துள்ளனர் , அவர்கள் அனைவரையும் நான் மனதார வரவேற்கிறேன் . திமுக கட்சி தொடங்கப்பட்டது என்பது ஆட்சிக்காக அல்ல ஏழைய எளிய விவசாயபெருங்குடி மக்களுக்கானது என்று கட்சி தொடங்கிய போதே அறிஞர் அண்ணா கூறியிருந்தார்.
அநாதையாக அலைந்து
நாட்டில் எத்தனையோ கட்சிகள் உள்ளன , வரலாற்றில் இடம்பெற்ற கட்சிகளும் உண்டு திடீர், திடீரென தோன்றும் கட்சிகளும் உண்டு. அப்படி தோன்றும் கட்சிகள் நாங்கள் தான் அடுத்த அடுத்த ஆட்சி. நான் அடுத்த முதலமைச்சர் என்று சொல்கிறார்கள். அப்படி சொல்லி இன்று அநாதையாக அலைந்து கொண்டிருப்பதை நாம் இங்கு காண்கிறோம்
இன்றைக்கு மதம், சாதியை பயன்படுத்தி கலவரம் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தி இந்த ஆட்சியை கலைத்துவிடலாம் என கனவு காண்கின்றனர். அதற்கு நாம் செவி சாய்க்காமல் பாராளுமன்ற தேர்தல் பணியை தொடங்க வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில் 40-ம் நமதே, நாளையும் நமதே என்ற உறுதியுடன் பணிகளை தொடங்குங்கள்.
#Live: மாற்றுக் கட்சியினர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் விழாவில் சிறப்புரை https://t.co/XtPTAvLgmE
— M.K.Stalin (@mkstalin) March 11, 2023
40-ம் நமதே
சென்ற முறை 39-ல் வெற்றி பெற்றோம். இந்த முறை மொத்தமாக 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும். இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெற நாம் முயற்சியில் ஈடுபட போகிறோம். அதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.