இல்லத்தில் மு.கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தை நிறுவிய தொண்டர்....! வைரல் வீடியோ...!

M Karunanidhi Tamil nadu
By Nandhini 1 மாதம் முன்
Report

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவைப் போற்றும் வகையில், தன் இல்லத்தில் 16 அடி உயரத்தில் பேனா சின்னத்தை தொண்டர் ஒருவர் நிறுவியுள்ளார்.

கடலுக்குள் பேனா வடிவில் நினைவுச் சின்னம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நினைவைப் போற்றும் வகையில், சென்னை மெரீனா கடற்கரையில் அவரது நினைவிடத்திற்கு அருகில் கடலுக்குள் 134 அடி உயரத்தில் பேனா வடிவில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் ரூ.81 கோடி செலவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலுக்குள் அமைக்கப்படும் இந்த பேனா நினைவுச் சின்னத்தை சென்றடைய கடற்கரையில் 290 மீட்டர் நீளத்திற்கும் கடலுக்குள் 360 மீட்டர் நீளத்திற்கும் பாலம் அமைக்கப்பட இருக்கிறது. ஒட்டுமொத்தமாக 8,551.13 சதுர மீட்டர் இடம் பயன்படுத்தப்பட உள்ளது.

தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த முடிவுக்கு ஆதரவுகளும், எதிர்ப்புகளும், சர்ச்சையும் ஏற்பட்டு வருகிறது.

m-karunanidhi-pen-memorial-volunteer-at-his-home

இல்லத்தில் பேனா சின்னம் நிறுவிய தொண்டர்

இந்நிலையில், சென்னை ஆதம்பாக்கத்தில், திமுக தொண்டர் பிரபாகரன் என்பவர் தனது இல்லத்தில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் 16 அடி உயரத்தில் பைபர் மற்றும் சில்வர் கலந்த பேனாவை நிறுவியுள்ளார்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.   

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.