கலைஞரை பார்த்தபோது என் நெஞ்சம் உருகிவிட்டது... - தழுதழுத்த குரலில் உருக்கமாக பேசிய அமைச்சர் துரைமுருகன்

Durai Murugan
By Nandhini May 28, 2022 01:04 PM GMT
Report

சென்னை அண்ணா சாலையில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாழுடுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணுவித்து வரவேற்றார். பின்னர், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் வெண்கல சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

ரூ.1.7 கோடி மதிப்பில் அந்த முழு உருவ வெண்கல சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. கலைஞரின் ஐந்து கட்டளைகள் சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

இவ்விழாவில், தமிழக அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ஒருபக்கம் இது மகிழ்ச்சியான நாள். மறுபக்கம் அந்த சிலையை பார்த்தப்போது உள்ளம் உருகிவிட்டது. நம்மிடம் கலைஞர் பேசுவது போல் சிலை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. காமராஜர், பெரியார், அண்ணா சிலைகளை தொடர்ந்து கலைஞர் சிலை அமைந்துள்ளது. கலைஞர் சிலை எங்கே ஏன் இருக்க வேண்டும் என சிந்தித்து முடிவு எடுத்தவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று உருக்கமாக பேசினார்.   

கலைஞரை பார்த்தபோது என் நெஞ்சம் உருகிவிட்டது... - தழுதழுத்த குரலில் உருக்கமாக பேசிய அமைச்சர் துரைமுருகன் | M Karunanidhi Durai Murugan