வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என வாழ்ந்தவர் கருணாநிதி - முதலமைச்சர் புகழாரம்
வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என வாழ்ந்தவர் கருணாநிதி என்று கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கும் விழா முதலமைச்சர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இன்று 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளுக்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கும் விழா சென்னை பெரும்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விருதாளர்களுக்கு விருது கொடுத்து கவுரவித்தார்.
கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது விழா
கொரோனா பெருந்தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்படாமல் இருந்தது.
இன்று 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளுக்கான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுடன் ரூ.10 லட்சம் ரூபாய் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதாளர்களுக்கு வழங்கி கவுரவித்தார்.
2020ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது ராஜேந்திரன் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
2021ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது நெடுஞ்செழியன் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
2022ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது ழான் லூயிக் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதனையடுத்து, இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் பேசியதாவது -
கலைஞர் கருணாநிதி தமிழுக்கு செம்மொழி கௌரவத்தை பெற்று தந்தவர். பிற மொழி உதவியின்றி தனித்து இயங்கக் கூடியது தமிழ் மொழி. கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை கொண்டு வந்தவர்.
வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என வாழ்ந்தவர் கருணாநிதி. தற்போது செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தமிழ் மொழி ஆய்வு, மேம்பாட்டில் தனி கவனம் செலுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.