கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது - ரூ.10 லட்சம் பரிசு வழங்கி கவுரவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளுக்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விருதாளர்களை கவுரவித்து மகிழ்ந்தார்.
கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது விழா
கொரோனா பெருந்தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், சென்னை பெரும்பாக்கத்தில் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளுக்கான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுடன் ரூ.10 லட்சம் ரூபாய் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதாளர்களுக்கு வழங்கி கவுரவித்தார்.

2020ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது ராஜேந்திரன் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
2021ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது நெடுஞ்செழியன் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
2022ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது ழான் லூயிக் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.