டிஜிபி முதல் காவலர் வரை இந்தாண்டு காவலர் பதக்கங்கள் வழங்கப்படும் - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
குடியரசு தலைவரின் கொடியினை தமிழ்நாடு காவல் துறைக்கு வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.
குடியரசு தலைவரின் கொடி
குடியரசு தலைவரின் கொடியினை தமிழ்நாடு காவல் துறைக்கு வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் மு. க. ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி கொடி பெறும் நிகழ்வில் டிஜிபி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். காவல் துறையின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்ட குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ஜனாதிபதி கொடியை வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
இதனையடுத்து, இந்நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசியதாவது -
தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது. காவல்துறையின் செயல்பாடு பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. கடந்த ஓராண்டில் சாதி, மதக் கலவரங்கள், துப்பாக்கிச்சூடுகள் இல்லை. காவல்நிலைய மரணங்களே இல்லை என சொல்லவில்லை, ஆனால் குறைந்துள்ளது.
குற்றங்களை தடுப்பதை விட, குற்றங்களே நிகழாத சூழலை உருவாக்க வேண்டும். சிறை மரணங்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். தமிழக காவல்துறைக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கே கிடைத்த பெருமை. உயிரை பொருட்படுத்தாமல் தமிழக காவல்துறை ஆற்றிய சேவைக்கான அங்கீகாரம்.
இவ்வாறு அவர் பேசினார்.