திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒற்றைத் தலைமை
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தியது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்று ஈபிஎஸ் தரப்பு தெரிவித்தது. இதனால், அதிமுகவில் உச்ச கட்ட பரபரப்பு நிலவியது.
பொதுக்குழுவுக்கு வந்த ஓபிஎஸ் - இபிஎஸ்
இன்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்னை வானகரம் மண்டபத்தை வந்தடைந்தார் ஓ.பன்னீர்செல்வம். கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்து முதல் ஆளாக பொதுக்குழு கூட்டத்திற்கு வந்தடைந்தார். இதனையடுத்து, எடப்பாடி பழனிச்சாமியும் பொதுக்குழு கூட்டத்திற்கு வந்தடைந்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்நிலையில், கேகேஎஸ்எஸ்ஆர் இல்ல திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அந்நிகழ்ச்சியில் பேசுகையில், திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர். மற்றொரு மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியும். அதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.