மறைந்த கலைஞரின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு சாகித்திய அகாதமி விருது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இவரின் பிறந்தநாளை தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
இன்று காலையில், தன்னுடைய தந்தையும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு கனவு இல்லத் திட்டத்தின் கீழ், தமிழ் மொழியில் வெளியான தலைசிறந்த தமிழ் இலக்கியப் படைப்பிற்கு வழங்கப்படும் சாகித்திய அகாதமி விருதும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதும் தமிழக முதலமைச்சர் வழங்கி கவுரவித்தார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கனவு இல்லத் திட்டத்தின் கீழ், தமிழ் மொழியில் வெளியான தலைசிறந்த தமிழ் இலக்கியப் படைப்பிற்கு வழங்கப்படும் சாகித்திய அகாதமி விருது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது ஆகிய
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 3, 2022
1/3 pic.twitter.com/BSXNAKRJpc