ஆதி திராவிட கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு - நிறைவேறிய முதலமைச்சரின் தனித்தீர்மானம்!
கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இட ஒதுக்கீடு
கடந்த சில ஆண்டுகளாக சமூக மற்றும் பொருளாதாரம் ரீதியாக ஒடுக்கப்பட்டோருக்கு அரசு இட ஒதுக்கீடு அளித்தது. அதில் முன்னணியில் இருப்பவர்கள் ஆதி திராவிடர்கள். அவர்களில் இந்து மதங்களில் இருந்து கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
இதுபோல சீக்கிய மதம் மற்றும் பௌத்த மதங்களுக்கு மாறியவர்களுக்கும் பெரும் போராட்டத்திற்கு பின் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
தனி தீர்மானம்
இந்த மதங்களை சேர்ந்த ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களும் அணைத்து சமூக நீதியின் பயன்களை பெறவேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.
தற்பொழுது இந்த தீர்மானம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக ஏற்கனவே முன்னாள் முதலமைச்சரான மு.கருணாநிதி 3 முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.