இந்த நிலைக்கு நீங்களே காரணம் : தமிழக வனத்துறைக்கு முதலமைச்சர் .ஸ்டாலின் பாராட்டு

M K Stalin DMK
By Irumporai Jul 26, 2022 05:18 PM GMT
Report

தமிழக வனத்துறைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ராம்சார் அங்கீகாரம்

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் , "பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பிச்சாவரம் அலையாத்திக் காடுகள், கரிக்கிலி பறவைகள் காப்பகம் ஆகியவை தற்போது ஈரநிலங்களுக்கான உலகின் மதிப்பு மிகுந்த 'ராம்சர்' அங்கீகாரத்தை பெற்றுள்ளன.

இந்த நிலைக்கு நீங்களே காரணம் : தமிழக வனத்துறைக்கு முதலமைச்சர் .ஸ்டாலின் பாராட்டு | M K Stalin Praises Tamil Nadu Forest

நான்காக அதிகரிப்பு

ஏற்கனவே இவ்வங்கீகாரத்தைப் பெற்ற கோடியக்கரையையும் சேர்த்து, தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை நான்காக ஆகியுள்ளது.

இத்தகைய நிலையை எட்டியிருப்பதற்காகத் தமிழ்நாடு வனத்துறையைப் பாராட்டுகிறேன்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என அதில் கூறப்பட்டுள்ளது