தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் ப.சிதம்பம் - வைரலாகும் புகைப்படம்
5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்தில் கூட முன்னிலையில் இல்லை. இது காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக 3 குழுக்களை தற்போது காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. அரசியல் விவகாரங்கள் குழு, தேர்தல் செயல்பாட்டுக்குழு, யாத்திரை குழு ஆகியவற்றை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.
அரசியல் விவகாரங்களுக்கான சூழலில், தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ப.சிதம்பரம், ஜோதிமணி உட்பட 8 பேர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். தற்போது இது குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.