பொது சிவில் சட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு - சட்ட ஆணையத்துக்கு கடிதம்..!

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Jul 13, 2023 11:31 AM GMT
Report

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் ரிதுராஜ் அவஸ்திக்கு கடிதம் எழுத்தியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் 

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், சமூக கட்டமைப்பிற்கு பெயர் பெற்ற இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்திட இக்கடிதத்தினை எழுதுவதாகவும்,

சில சீர்திருத்தங்களின் அவசியத்தை தாம் உணரும் அதே வேளையில் பொது சிவிலர் சட்டம் ஒரு கடுமையான அச்சுறுத்தலை முன்வைக்கிறது என்றும் நமது சமூகத்தின் பல்வேறுபட்ட சமூகக் கட்டமைப்பிற்கு சவால் விடுப்பதாகவும் உள்ளது எனவும் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பொது சிவில் சட்டத்தினை அமல்படுத்துவதை தமிழ்நாடு அரசு எதிர்ப்பதற்கான காரணங்களை பின்வருமாறு பட்டியலிட்டுள்ளார்.  

M. K. Stalin opposition to the General Civil Code

M. K. Stalin opposition to the General Civil Code