சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு இன்று 101-வது பிறந்தநாள் - தமிழக முதலமைச்சர் வாழ்த்து
இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான என்.சங்கரய்யாவின் 101வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இதனையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்த பதிவில், பொதுவுடைமைச் சிந்தனை எனும் கலங்கரை விளக்கத்தை அடுத்த தலைமுறையினருக்கு அடையாளம் காட்டும் #தகைசால்தமிழர் தோழர். சங்கரய்யா அவர்களுக்கு, 101-ஆவது பிறந்தநாளில் உங்களில் ஒருவனாக வாழ்த்துகளைப் பகிர்கிறேன்! போராட்டங்களும் தியாகங்களும் நிறைந்த அவர் இன்னும் பல்லாண்டு வாழ்க! என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த வருடம் பொதுவுடைமை இயக்கத் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொதுவுடைமைச் சிந்தனை எனும் கலங்கரை விளக்கத்தை அடுத்த தலைமுறையினருக்கு அடையாளம் காட்டும் #தகைசால்தமிழர் தோழர். சங்கரய்யா அவர்களுக்கு, 101-ஆவது பிறந்தநாளில் உங்களில் ஒருவனாக வாழ்த்துகளைப் பகிர்கிறேன்!
— M.K.Stalin (@mkstalin) July 15, 2022
போராட்டங்களும் தியாகங்களும் நிறைந்த அவர் இன்னும் பல்லாண்டு வாழ்க! pic.twitter.com/28twopnfXD