தமிழகத்திற்கு மிகப் பெரிய ஜவுளி பூங்கா - பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

M K Stalin Tamil nadu Narendra Modi
By Thahir 2 வாரங்கள் முன்
Report

தமிழ்நாட்டில், பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்காவை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்திட வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் 

பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், நேற்று ஜவுளித் துறையை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ம.பி மற்றும் உ.பி.யில் பி.எம். மித்ரா திட்டத்தின்கீழ் மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

தமிழகத்திற்கு மிகப் பெரிய ஜவுளி பூங்கா - பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் | M K Stalin Letter To The Prime Minister

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், விருதுநகர் மாவட்டத்தில் மாபெரும் ஜவுளி பூங்கா அமையவுள்ளதாக அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில், பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்காவை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்திட வேண்டும். திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேவையான நிலங்களை சிப்காட் நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது என அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.