கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - கமல்ஹாசன் டுவிட்
முதலமைச்சருக்கு பரிசோதனை
அண்மையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உடற்சோர்வு காரணமாக பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் உடல் பரிசோதனைக்காக அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைக்கள் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் முதலமைச்சருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் டுவிட்
இது குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் @mkstalin விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணிக்குத் திரும்பவேண்டுமென விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் @mkstalin விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணிக்குத் திரும்பவேண்டுமென விரும்புகிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) July 13, 2022