சென்னையில் "L" வடிவ மேம்பாலம் திறப்பு

M K Stalin Chennai
By Fathima Feb 15, 2026 06:13 AM GMT
Report

சென்னையில் எல் வடிவ இருவழிச்சாலை மேம்பாலத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார்.

சிஐடி நகர் தொடங்கி தெற்கு உஸ்மான் சாலை வரை 1.2 கி.மீ தூரத்திற்கு சென்னையின் முதல் இரும்பு பாலத்தை இன்று காலை 10 மணியளவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியின் போது அமைச்சர்கள் எ. வ வேலு, மா. சுப்பிரமணியன் மற்றும் திமுக தலைவர்கள் பலர் உடனிருந்தனர்.

சென்னையில் "L" வடிவ மேம்பாலம் திறப்பு | M K Stalin Inaugurated The L Shaped Flyover

சென்னையின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் பகுதியாக தியாகராய நகர் உள்ளது, வணிக ரீதியான முக்கிய பகுதியாகவும் திகழ்வதால் கூட்டநெரிசல் இல்லாமல் மக்கள் மிக எளிதில் பயணிக்கலாம்.

தற்போது திறக்கப்பட்டுள்ள பாலம் அகலம் கொண்டதாகவும், ஒரு வழி வாகனப் போக்குவரத்து கொண்டதாகவும், 652 மீ. நீளம் கொண்டதாகவும், ரூ.61 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. 45 நிமிட பயணம் இனிமேலும் 5 நிமிட பயணமாக சுருங்கியுள்ளது.  

சென்னையில் "L" வடிவ மேம்பாலம் திறப்பு | M K Stalin Inaugurated The L Shaped Flyover