முதலமைச்சர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வியர்வையும், ரத்தமும் சிந்தி வந்துள்ளார் - கி.வீரமணி

M K Stalin DMK
By Thahir Oct 13, 2022 06:42 AM GMT
Report

44 ஆண்டுகளுக்கு முன் மிசாவில் கைது செய்யப்பட்ட போது சிறையில் ரத்தம் சொட்ட ஸ்டாலினின் கரத்தை பிடித்தோம்.அந்த கரத்தை இன்றும் பிடித்திருக்கிறோம் என ஆசிரியர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.

மக்கள் சக்தி நம்மிடம் உள்ளது

சென்னையில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவானது வியர்வைக்கு வெகுமதி என்ற தலைப்பில் நடைபெற்றது.

இந்த விழாவில் அமைச்சர்கள், ஆசிரியர் கீ.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய ஆசிரியர் கீ.வீரமணி,

முதலமைச்சர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வியர்வையும், ரத்தமும் சிந்தி வந்துள்ளார் - கி.வீரமணி | M K Stalin Has Shed Sweat And Blood

‘ஆட்சி, சட்டம், ஆளுநர், அச்சுறுத்தல் என எல்லாமே பாஜக பக்கம் இருந்தாலும் மக்கள் சக்தி நம்மிடம் உள்ளது; பிறகு என்ன தைரியதில் சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரும் என்கிறார்கள்.

வியர்வையும், ரத்தமும் சொட்ட இந்த பதவிக்கு மு.க.ஸ்டாலின் வந்துள்ளார்  

4 பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் தமிழ்நாட்டில் இல்லாமல் துடைத்தெறிய படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வியர்வையும், ரத்தமும் சிந்தி வந்துள்ளார் - கி.வீரமணி | M K Stalin Has Shed Sweat And Blood

மேலும், வியர்வை மட்டுமல்ல ரத்தமும் சிந்தி தான் இந்த பதவிக்கு மு.க.ஸ்டாலின் வந்துள்ளார். 44 ஆண்டுகளுக்கு முன் மிசாவில் கைது செய்யப்பட்ட போது சிறையில் ரத்தம் சொட்ட ஸ்டாலினின் கரத்தை பிடித்தோம்.அந்த கரத்தை இன்றும் பிடித்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.