மாஸ் காட்டிய தமிழக முதலமைச்சர் - இந்தியாவிலேயே முதல்முறையாக 11,806 ஹெக்டேர் பரப்பளவில் தேவாங்கு சரணாலயம்...!
இந்தியாவிலேயே முதல்முறையாக 11,806 ஹெக்டேர் பரப்பளவில் தமிழ்நாட்டில் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தேவாங்குகள்
தேவாங்குகள் இரவு நேர பாலூட்டிகள். இவை மரவகை இனத்தைச் சார்ந்து வாழ்கின்றன. தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை மரங்களில் இவைகள் கழிக்கின்றன. தேவாங்கு இனம் விவசாய பயிர்களுக்கு சேதம் உண்டாக்கும் பூச்சிகளை சாப்பிட்டு, விசாயிகளுக்கு நன்மை கொடுக்கிறது. ஆனால், தேவாங்கு இனம் அழிந்து வரும் இனமாக பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) தெரிவித்தது.

தமிழ்நாட்டில் தேவாங்கு சரணாலயம்
இந்த உயிரினங்களின் வாழ்விடத்தை மேம்படுத்தவும், இவ்வினத்தை பாதுகாக்கவும் தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது.
இன்று கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806 ஹெக்டேர் நிலத்தை இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக அமைக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், 11,806 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள வனப்பகுதிகள், தேவாங்குகளின் முக்கிய வாழ்விடங்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.
இந்தியாவிலேயே முதல்முறையாக தேவாங்குகளுக்கான வனவிலங்கு சரணாலயம், தமிழ்நாட்டில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளது என்று தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டது.
இதனையடுத்து, இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக "கடவூர் தேவாங்கு சரணாலயம்" அமைத்து தமிழ்நாடு அரசு இன்று அறிவிக்கை செய்துள்ளது.
தமிழக அரசின் இந்த புதுமையான முயற்சிகள், தமிழ்நாட்டுக்கு ஒரு உன்னத இடத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.