‘தகைசால் தமிழர்’ விருது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த நல்லக்கண்ணு...!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு.
முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த நல்லகண்ணு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவிற்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதற்கு நன்றி தெரிவிப்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரில் வந்தார்.
அவர் வருவதை அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மூத்த தலைவர் நல்லகண்ணு கையைப் பிடித்து அழைத்து வந்தார். பின்னர், நல்லகண்ணு அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி முதலமைச்சர் வரவேற்றார். அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.
10 லட்சம் ரூபாய் காசோலை அறிவிப்பு
“தகைசால் தமிழர்” விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.நல்லகண்ணுவிற்கு பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் வழங்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.