சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு தீவுத்திடலில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...!
சென்னை சங்கமம் நிகழ்ச்சி
தீவுத்திடலில் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும், தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் புத்தாக்கத்துடனும், புத்துணர்ச்சியுடனும் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கி 17-ம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்நிகழ்ச்சியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நாளையிலிருந்து சென்னையில் இருக்கக்கூடிய பல பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் என கிட்டத்தட்ட 16 இடங்களில் மாலை நேரங்களில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. சென்னை சங்கமம் நிகழ்ச்சி சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.