130 சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்...!
130 சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஓமியோபதி உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை
இன்று தலைமைச்செயலகத்தில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 130 சித்தா, ஆயுர்வேத, ஓமியோபதி மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 130 சித்தா, ஆயுர்வேத மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கு உதவி மருத்துவ அலுவலர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 5 சித்தா உதவி மருத்துவர்கள், 5 ஆயுர்வேதா உதவி மருத்துவர்கள், 5 ஓமியோபதி உதவி மருத்துவர்கள் என 15 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, இ.ஆ.ப.மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், மருத்துவத் தேர்வு வாரியத் தலைவர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.