1000 ரூபாய் வழங்குவது இலவசமல்ல, அரசின் கடமையாகும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி படிப்புகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் புதுமைப்பெண் திட்டத்தை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
புதுமைப்பெண் திட்டம்
சென்னையில், இன்று அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி படிப்புகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் புதுமைப்பெண் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி படிப்புகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் புதுமைப்பெண் திட்டத்தை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் பேச்சு
இதன் பின், இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் பேசியதாவது -
சமூக நீதி என்பது சலுகை அல்ல, அரசின் கடமை. பெண் கல்வி ஊக்குவிக்கப்படும் போது, சமத்துவம் நிலைக்கும். 1000 ரூபாய் வழங்குவது இலவசமல்ல, அரசின் கடமையாகும். புதுமைப்பெண் திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
முதற்கட்டமாக 1 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும், கற்றலோடு மாணவர்களின் பல்வேறு திறன்களையும் ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.