சிறுமி டானியாவை அன்புடன் நலம் விசாரித்து, புன்னகையைப் பரிமாறிக் கொண்டேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin Tamil nadu
By Nandhini Aug 30, 2022 03:34 AM GMT
Report

சிறுமி டானியாவை அன்புடன் நலம் விசாரித்து, புன்னகையைப் பரிமாறிக் கொண்டேன் என்று தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

சிறுமி டான்யா

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, வீராபுரத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி டான்யா, அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி ஊடகங்களில் சிறப்பு செய்தியாக வெளியானது. இதனையடுத்து, சிறுமி டான்யா அரசு மருத்துவ குழுவினரால் பரிசோதித்த பிறகு தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் பின்பு, கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி சிறுமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து, சிறுமியின் தாயார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். போனில் பேசிய முதலமைச்சர் சிறுமியை நேரில் வந்து பார்ப்பதாக உறுதியளித்தார்.

நலம் விசாரித்த முதலமைச்சர்

அதன்படி, நேற்று அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு, சவீதா மருத்துவமனைக்கு சென்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், சிறுமி டானியாவை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது சிறுமியின் தாயார் கண்ணீர் மல்க முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். அவருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுமி விரைந்து நலம் பெற வாழ்த்தினார்.

m.k.stalin

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்

இந்நிலையில், இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், சிறுமி டானியாவை அன்புடன் நலம் விசாரித்து, புன்னகையைப் பரிமாறிக் கொண்டேன். வலுவான நம்முடைய மருத்துவக் கட்டமைப்பால், இது சாத்தியமாகியுள்ளது. இந்தப் புன்னகையைவிட எது இன்றைய நாளை முழுமையாக்கியிருக்க முடியும்? நம் மருத்துவக் கட்டமைப்பைக் காத்து, புன்னகைகளைப் பரிசாகப் பெறுவோம்! என்று பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த டுவிட் வீடியோ -